puducherry former minister malladi krishna rao car incident 

Advertisment

புதுச்சேரி அரசுக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதியும், திருப்பதி தேவஸ்தான போர்டு உறுப்பினராகவும்உள்ள புதுச்சேரியின்முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் புதுச்சேரியில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது துரைப்பாக்கம் சிக்னலில்மல்லாடி கிருஷ்ணாராவின் கார் நின்றுகொண்டிருந்த போது பின்னால் வந்த டேங்கர் லாரி ஒன்று திடீரென எதிர்பாராத விதமாக மல்லாடி கிருஷ்ணாராவின் கார் மீது மோதியது. இதனால் கிருஷ்ணாராவின் காருக்குமுன்னால் நின்றிருந்த லாரியின் மீது கிருஷ்ணாராவின் கார் மோதியது. இந்த விபத்தில் கிருஷ்ணாராவின் காரின் கண்ணாடி உடைந்து பலத்த சேதமடைந்தது. மேலும் மல்லாடி கிருஷ்ணாராவ் அவரது பாதுகாப்பாளர்கள் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் எவ்விதகாயமும் இன்றி உயிர் தப்பினர். மேலும் பாதுகாப்பு அதிகாரி சிவக்குமார், விபத்துக்கு காரணமான டேங்கர் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் இவர் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பதும் மது போதையில் இருந்ததும் தெரியவந்தது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.