Advertisment

சிதம்பரம் தில்லை அம்மன் கோவிலில் புதுச்சேரி முதல்வர் சாமி தரிசனம்

Puducherry CM Samy darshanam at Chidambaram Thillai Amman temple

Advertisment

சிதம்பரம் நகரத்தில் பழமை வாய்ந்த தில்லை அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கடந்த மாதம் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மண்டல அபிஷேகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை மதியம் சாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை,கோவிலில் உள்ள அர்ச்சகர்கள் வரவேற்று சாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். இதனையடுத்து,தில்லை அம்மன் மற்றும் தில்லைக்காளி ஆகிய சன்னதிகளில் சாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலைச் சுற்றி வந்தார் . பின்னர் அங்குக் கொடுக்கப்பட்ட பிரசாதத்தை அருந்தினார். அவருக்கு அளித்த பிரசாதத்தை அவருடன் வந்தவர்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் அவரது கையால் எடுத்து வழங்கினார். இதனை அனைவரும் பெற்றுக் கொண்டனர். இவரிடம் செய்தியாளர்கள் பேட்டி கேட்டபோது அவர் பேட்டி கொடுக்க மறுத்துவிட்டார்.

Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe