Advertisment

ஊரடங்கு தளர்வால் குவிந்த மக்கள் - கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எச்சரிக்கை!  

Narayanasamy

புதுச்சேரியில் ஊரடங்கு நடைமுறையில் இருந்த நிலையில் 42 நாட்களுக்கு பிறகு இன்று தளர்வு தரப்பட்டு கடைகள் திறக்கப்பட்டன. அதனால்அதிகளவில் மக்கள் குவிந்து சாலையெங்கும் நெரிசல் காணப்பட்டது.

Advertisment

இதனால் அதிருப்தியடைந்த முதல்வர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோவில், “புதுச்சேரியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்காமலும், முக கவசங்கள் அணியாமலும் அரசின் உத்தரவுகளை கடைபிடிக்காமல் அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் மனம் உறுத்த செய்கிறது.

Advertisment

விதிகளை கடைபிடிக்காமல் அரசின் உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்டு கடைகள் செயல்பட்ட நிலையில் அவ்வாறு செயல்படும் கடைகளை மூட உத்தரவிடப்படும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை கோயம்பேட்டில் இருந்து வந்த நபர்களால் புதுச்சேரியின் அண்டை மாநிலமான தமிழகத்தின் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கன்னிக்கோயில், மதகடிப்பட்டு, காலாப்பட்டு உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் வெளி மாநில நபர்கள் நுழைய தடை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகம் பரவியுள்ளதால் புதுச்சேரியை பாதுகாப்பது பெரும் சவாலான விஷயமாக உள்ளது.மக்கள் அதிகப்படியாக வெளியே நடமாடி வருவதால், கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தால்தான் மதிப்பார்கள் என்றால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அது தொடர்பாக இன்று மாலை பேரிடர் தடுப்பு தொடர்பான கூட்டம் நடைபெற உள்ளது,கூட்டம் முடிந்தபின் அரசு எடுத்துள்ள முடிவுகள் தொடர்பாக அறிவிக்கப்படும்” என கூறியுள்ளார்.

Narayanasamy chief minister Puducherry
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe