puducherry AIADMK separation ... AIADMK action announcement!

Advertisment

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு முக்கிய நிர்வாகச் செயல்பாடுகளை அ.தி.மு.க அறிவித்துள்ளது. அதன்படி, புதுச்சேரி மாநில அ.தி.மு.க இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அ.தி.மு.க தலைமை அறிவித்துள்ளது. புதுச்சேரி கிழக்கு மாநிலச் செயலாளராக அன்பழகனும், புதுச்சேரி மேற்கு மாநிலச் செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகரும்நியமிக்கப்பட்டுள்ளதாக ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் அதிமுகவின் சார்பில் ஊடகங்களைச் சந்திக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில்அமைச்சர் தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதேபோல் அமைச்சர் காமராஜ், ஆர்.பி.உதயகுமார், மாஃபா பாண்டியராஜன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர், வைகைச்செல்வன், பரமசிவம் ஆகியோரும் ஊடகங்களைச் சந்திக்கும் குழுவில் இடம் பெற்றுள்ளதாகஅ.தி.மு.க தெரிவித்துள்ளது.

அதேபோல், எதிர்க்கட்சிகளின் அறிக்கைகளுக்கு பதிலளிக்கஅதிமுக குழு அமைத்துள்ளது. இந்தக் குழுவில் பொன்னையன்,பொள்ளாச்சி ஜெயராமன் நியமிக்கப்பட்டுள்ளனர்.அமைச்சர் ஜெயக்குமார், செம்மலை, ரவிபெனார்ட், மருது அழகுராஜ் ஆகியோரும்இக்குழுவில்நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

அதிமுக பிரச்சாரக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில்பொன்னையன், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். அதேபோல், பொள்ளாச்சி ஜெயராமன், சி.வி.சண்முகம் ஓ.எஸ்.மணியன், ஜே.சி.டி.பிரபாகரன்,தம்பிதுரை, வைகைச்செல்வன், இளங்கோவன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.