Advertisment

புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கார் விபத்து

Puducherry Agriculture Minister car accident

புதுச்சேரி அருகே வேளாண்துறை அமைச்சரின் கார் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் ஒருகாதணி விழாவில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் புதுக்கோட்டை, ஆலங்குடி, வடகாடு வழியாக ஒரு காரில் பேராவூரணி சென்று கொண்டிருந்தார். அப்போது மாங்காடு பூச்சிகடை அருகே பிரிவு சாலையில் திரும்பிய ஒரு மோட்டார் சைக்கிளில் மோதாமல் இருப்பதற்காக காரை ஓரமாக செல்ல முயன்றபோது சாலையோரம் கிடந்த பெரிய கல்லில் மோதியுள்ளது.

Advertisment

கார் மோதிய சத்தம் பயங்கரமாக கேட்டதை அடுத்து பொதுமக்கள் ஓடிச்சென்று பார்த்தபோது கார் முன்பக்கம் முற்றிலும் சேதமடைந்து கிடந்தது.காரில் இருந்த புதுச்சேரி அமைச்சர் தேனி ஜெயக்குமார் கார் மற்றும் ஓட்டுநர் இருவருக்கும் காயமில்லாமல் தப்பினர். அமைச்சரின் பாதுகாவலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை மீட்டு அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்தசம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

minister road accident Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe