புதுச்சேரி மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலி...

புதுச்சேரி முதலியார்பேட்டை, வேல்ராம்பட்டு திருமால் நகரைச் சேர்ந்தவர் தங்க பத்மாவதி. இவரது மகன் சுரேந்தர் (20). இவர் சென்னையில் சட்டம் படித்து வந்தார். இவர் நேற்று இரவு 10 மணியளவில் இ.சி.ஆ.ர். சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது லிப்ட் கேட்ட திலாஸ்பேட்டையைச் சேர்ந்த விண்ணரசி (30) எனபவரையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டார். இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றபோது சுரேந்தர் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டியதாக தெரிகிறது. இதனால் மோட்டார் சைக்கிள் சுரேந்தர் கட்டுப்பாட்டை இழந்தது. இதன் காரணமாக சிவாஜி சதுக்கம் அருகே புதிதாக அமைத்திருந்த டிரான்ஸ்பார்மரில் மோட்டார் சைக்கிள் மோதியது.

pudhucherry bike accident

இந்த விபத்தில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்தபகுதியினர் அவர்களை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதனையடுத்து இந்த விபத்து குறித்து புதுச்சேரி வடக்குபகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Pondicherry
இதையும் படியுங்கள்
Subscribe