Advertisment

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

Publication  rank list for Agriculture and Horticulture courses in Annamalai University

Advertisment

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் தோட்டக்கலை படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை துணைவேந்தர் ராம. கதிரேசன் வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடப்பு 2022 - 23ம் கல்வியாண்டிற்கான இளங்கலை வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்ட படிப்புகளுக்கும், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டய படிப்புகளுக்குமான தரவரிசைப் பட்டியலை பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசன் பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிட்டார். தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், அனைத்து புல முதல்வர்கள், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், மாணவர் சேர்க்கைப் பிரிவு இயக்குநர் மணிவாசகம், துணை இயக்குநர் பாஸ்கர், மக்கள் தொடர்பு அதிகாரி இரத்தின சம்பத், துணைவேந்தரின் செயலாளர் பாக்கியராஜ் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வில் கலந்துகொள்ள கலந்தாய்வுக் கட்டணம் செலுத்த 02.01.2023 அன்று மாலை 5 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தரவரிசை பற்றிய விவரங்களைப் பல்கலைக்கழக இணையதளத்தில் (www.annamalaiuniversity.ac.in) அறிந்து கொள்ளலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe