Publication of notification on Secondary Teacher Posts

அரசுப்பள்ளிகளில்1768 காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இடைநிலை ஆசிரியர் 2023-2024 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கை http://www.trb.tn.gov.in வாயிலாக இன்று (09.02.2024) வெளியிடப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க ஏதுவாக 14.02.2024 முதல் 15.03.2024 பிற்பகல் 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.