Advertisment

பட்ட பகலில் காரை திருடிச் சென்ற வாலிபரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்...

The public who caught the boy who stole the car in broad daylight

Advertisment

இன்று காலை (22/12/20) திருச்சி உறையூர் பகுதியில் ஊதா நிற எஸ்டீம் கார் மின்னல் வேகத்தில் கடந்து சென்றுள்ளது. அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து அந்த கார் நின்றது. இந்த காரை பொதுமக்கள் பிடிக்க முயன்ற போது கார் ஓட்டுநர் தப்பி ஓடியுள்ளார்.

இருப்பினும் பொதுமக்கள் விரட்டி பிடித்து உறையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த உறையூர் காவல்துறை விசாரணையில், காரை ஓட்டி வந்த நபர் 19 வயது நிரம்பிய விஷ்ணு என்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் என்றும், இவர் ஓட்டி வந்த கார் திருடப்பட்டு வந்தது என்பதும் அறிந்த காவல்துறையினர் அவரிடம் மேற்கொண்ட சோதனையில் மேலும் 6 கார்களின் சாவிகள் அவரிடம் இருந்ததைப் பறிமுதல் செய்தனர்.

The public who caught the boy who stole the car in broad daylight

Advertisment

மேலும், காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கார்களின் சாவிகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

car theft
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe