Advertisment

வேண்டுகோள் விடுத்த பொதுமக்கள்... உடனடி நடவடிக்கை எடுத்த ரயில்வே நிர்வாகம்!

The public who appealed ... Railway administration took immediate action!

திருச்சி மாவட்டம், பொன்மலை பகுதியில் உள்ள விவேகானந்தர் நகரில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த கேட்டின் வழியாக ஆயில்மில், வெங்கடேஷ்வரா நகர், கணேசபுரம், ராஜீவ்காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயணித்து வந்தனர்.

Advertisment

இந்நிலையில், இன்று (17/02/2022) காலை திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், இந்த ரயில்வே கேட் பூட்டப்பட்டது. அதன் அருகே வைக்கப்பட்டியிருந்த அறிவிப்பு பலகையில், "பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்றும், நாளையும் கேட் திறக்கப்படமாட்டாது" எனத் தெரிவிக்கப்பட்டியிருந்தது.

Advertisment

இதனைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இன்று பள்ளி, கல்லுாரிகள் இயங்கும் நாள், மேலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதிக் கட்ட பிரச்சாரம் நடைபெறும் நாள். எனவே பராமரிப்பு பணியினை வேறு ஒரு நாள் மேற்கொள்ள வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்திற்குப் பொதுமக்கள் செல்போன் மூலமாகவும், நேரிலும் வேண்டுகோள் விடுத்தனர் அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள்.

இதனை ஏற்ற ரயில்வே நிர்வாகம், பராமரிப்பு பணியினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உடனடியாக ரயில்வே கேட்டை திறந்தது. ரயில்வே நிர்வாகத்திற்குப் பொதுமக்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

railway trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe