Advertisment

"ஆம்பளை பிள்ளையோட திரும்பி வா கண்ணு..." - வேட்பாளரிடம் நெக்குருகும் பொதுமக்கள்!

ிு

திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டம் அடைந்து வருகிறது. நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வேட்பாளர்கள் சுற்றி சுழன்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரு கின்றனர். இந்நிலையில் நிலக்கோட்டை பேரூராட்சி 8-வது வார்டு திமுக பெண் வேட்பாளரான பாக்கியம் சிவனேசன் நிறைமாத கர்ப்பிணி ஆவார். தற்போது வேட்பாளராக களம் இறங்கி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்த நிலையில் பாக்கியத்திற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அவரோடு அதே வார்டில் போட்டி போடும் அதிமுக, அ.ம.மு.க பெண் வேட்பாளர்கள் நிகழ்ச்சிக்கு வந்து பாக்கியத்திற்கு வளையல் அணிவித்து வாழ்த்தி விட்டுச் சென்றனர். வளைகாப்பு நிகழ்ச்சி முடிந்து தாய் வீட்டுக்கு சென்ற பாக்கியம் போன கையோடு சிறிது நேரம் அவரது தாய் வீட்டில் அமர்ந்து விட்டு மின்னல் வேகத்தில் மீண்டும் பிரச்சாரக் களத்திற்குள் திரும்பி திமுக தொண்டர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Advertisment

கைகளில் நிறைந்த வளையல்களோடு கும்பிட்டு தனக்கு ஆதரவு தருமாறு துண்டுப்பிரசுரங்களை வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிக்க தொடங்கியிருக்கும் பாக்கியத்திற்கு பொதுமக்கள் பெரும் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். வாக்கு சேகரிப்பினை தாண்டி வாக்காளர்கள் பலரும் பள்ளம் மேடு பார்த்து போமா.. மெதுவா நடமா.. மாடிப்படியில் ஏறி வராத நாங்களே கீழ் வரோம்... ஆம்பளை பிள்ளையோட திரும்பி வா.. என கூறி வாக்கு கேட்டு வந்தவரை வாஞ்சையோடு வழியனுப்பி வைக்கின்றனர். இந்த வரவேற்பில் நெகிழ்ந்து போன பாக்கியம். தனது வேதனையும் மறந்து வெற்றி பெறும் இலக்கோடு தேர்தல் களத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்

Advertisment

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe