Advertisment

சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு... முடிவை மாற்றிக்கொண்ட அதிகாரிகள்...

Public tunnel construction ... Authorities change decision

மயிலம் சட்டமன்றதொகுதிக்குட்பட்ட மயிலம் ஒன்றியம் நெடி மோழியனூர் கிராமங்களுக்கு செல்லும் சாலையில் ரயில்வே கேட்டுக்கு பதிலாக ரயில்வே துறை மூலம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்றுகிறது. சுரங்கப்பாதை அமைத்தால் பொதுமக்கள் மற்றும் கரும்பு ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு இடையூராக இருக்கும் அதனால் அங்கு ரயில்வே மேம்பாலம் கட்டிதர வேண்டும் என கூறி அந்த கிராம பொதுமக்கள் பல கட்ட போராட்டங்கள் செய்து வருகிரார்கள்.

Advertisment

இன்று அதே கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் தங்களின் குடும்ப அட்டையையும், ஆதார் அட்டையையும் சமர்பிக்க செல்லும் வழியில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர் என செய்திகேட்டு மயிலம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் R மாசிலாமணி MLA, துணை ஆட்சியர் ஆகியோர்பொதுமக்களிடம் சமாதானம் பேசி உடனடியாக மாவட்ட ஆட்சியர் மூலம் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை நிறுத்த ஆவணம் செய்வதாகவும் பிறகு ரயில்வே துறை மூலம் சுரங்கப்பாதைக்கு பதிலாக மேம்பாலம் கட்ட உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் துணை ஆட்சியர் உறுதி அளித்தார். இதில் திண்டிவனம் துணை காவல் கண்காணிப்பாளர், வட்டாட்சியர் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Advertisment

railway
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe