Advertisment

'நரம்பியல் மருத்துவர்களின்றி தவிக்கும் பொதுமக்கள்'- குறைகளை கொட்டித்தீர்த்த நகர்மன்ற உறுப்பினர் 

'Public suffering without neurologists' - city councilor vents grievances

Advertisment

சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது.நகர்மன்ற தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் நகர்மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமரன், நகராட்சி பொறியாளர் மகாராஜன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். இதில் மூத்த நகர்மன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், ரமேஷ், வெங்கடேசன், அப்பு சந்திரசேகர், மக்கின்,ஜெயச்சித்ரா, தஸ்லீமா,புகழேந்தி, கல்பனா உள்ளிட்ட அனைத்து நகர்மன்ற உறுப்பினர்கள் அவர்களின் வார்டுகளில் உள்ள குறைகள் மற்றும் நகர்மன்ற தலைவரின் முயற்சியால் செய்த பணிகள் குறித்து பேசினார்கள்.

இதில் காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினர் தில்லை மக்கீன் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய மற்றும் நரம்பியல் மருத்துவர்கள் இல்லை. இருதயம் மற்றும் நரம்பியல் நோய் பாதிக்கப்பட்டவர்களை சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு அழைத்து செல்ல முடியாத நிலையில்பல்வேறு தரப்பு ஏழை மக்கள் உயிரை காப்பாற்ற முடியாமல் இருப்பதாகவும் பேசினார். மேலும் அவர்களின் குடும்பத்தில் ஒருவர் சமீபத்தில் இருதய மருத்துவர் இல்லாததால் இறந்ததை சுட்டிக்காட்டினார். உடனடியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதயம் மற்றும் நரம்பியல் மருத்துவரை நியமித்து போதிய சிகிச்சை ஏற்பாடு செய்ய வேண்டும் என பல நகர் மன்ற உறுப்பினர்கள் பேசினார்கள்.

இதற்கு நகர்மன்ற தலைவர் உடனடியாக அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று இருதயம் மற்றும் நரம்பியல் மருத்துவரை நியமிக்கவும், உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.இதனை அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும்வரவேற்றனர். இதனை தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisment

சமீபத்தில் நடைபெற்ற நடராஜர் கோவில் ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழாவின் போது நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செயல்பட்டதற்கு அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் நகராட்சி நிர்வாகத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Doctor hospital Medical
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe