
தெலங்கானாவில் கரோனா பாதிப்பு அதிகமாகஇருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை கணிசமான அளவிற்கு குறைந்துவருகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இருந்தும் பொது நிகழ்ச்சிகள் மற்றும் தனிப்பட்ட விழாக்கள் ஆகியவற்றைக் கொண்டாட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், அம்மாநிலத்தை ஆளும் டிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர், தனது பேத்தியின் பிறந்தநாளை ஆடல் பாடலுடன் விடியவிடிய கூட்டத்தைச் சேர்த்துக்கொண்டு கொண்டாடிய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனால் சிலர், இதுதொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர், ஆனால்ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் அவர் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் கூறுகிறார்கள்.
Follow Us