Advertisment

புதர் மண்டிய பகுதியில் பச்சிளம் குழந்தை: பொதுமக்கள் அதிர்ச்சி

Public shock

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு ஆவட்டி பேருந்து நிறுத்தம் அருகே பழைய டாஸ்மாக் கடை இருந்த புதர் மண்டிய பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை அப்பகுதி மக்கள் நடந்து சென்றனர்.

Advertisment

அப்போது புதர் மண்டய பகுதியில் குழந்தை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பிறந்து சில நிமிடங்களே ஆன தொப்புள்கொடி கூட அறுபடாத நிலையில் இருந்த அந்த குழந்தை புதர் மண்டிய பகுதியில் கிடந்தது குறித்து தகவல் பரவியதும் மக்கள் கூடினர். குழந்தையை ஒருவர் கையில் தூக்கினார். அப்போது குழந்தை உயிருடன் இருப்பது தெரியவந்ததும், உடனடியாக ஆவட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மருத்துவமனை ஊழியர்களிடம் குழந்தையை மக்கள் ஒப்படைத்துள்ளனர்.

Advertisment

பிறந்த உடனேயே குழந்தையை யார் வீசி சென்றனர் என்பதை கண்டுபிடிக்க ராமநத்தம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

child shock public
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe