Skip to main content

திருநெல்வேலியில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது!

Published on 16/12/2021 | Edited on 16/12/2021

 

The public is required to wear a face mask in Tirunelveli!

 

திருநெல்வேலி மாநகர காவல்துறை அலுவலகம் இன்று (15/12/2021) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், நமது நாட்டின் பல பகுதிகளில் மரபு திரிந்த கொரோனா வகை ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் விதமாக திருநெல்வேலி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணிவது இன்று (16/12/2021) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் நலனை காத்துக்கொள்வதோடு மற்றவர்களுக்கும், நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக, முகக்கவசம் அணிந்து, சமூக விலகளைக் கடைப்பிடித்து காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

 

மேலும், மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது அபாரதத்துடன் கூடிய சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், முகக்கவசம் அணியாத சமூக விலகலை கடைப்பிடிக்காத வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் வணிக வளாகங்களை சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் முனைவர் ந.கி.செந்தாமரை கண்ணன் இ.கா.ப., தெரிவித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சரின் பதவி மாற்றம்; மொத்தக் கூட்டத்தில் ஒற்றை 'மாஸ்க்'

Published on 11/05/2023 | Edited on 11/05/2023

 

PTR

 

தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக  டி.ஆர்.பி.ராஜா இன்று பொறுப்பேற்றார். ஆளுநர் மாளிகையில் முதல்வர் முன்னிலையில் டி.ஆர்.பி.ராஜாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தற்பொழுது புதிதாக பதவியேற்ற அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவிற்கான துறை மற்றும் சில அமைச்சர்களின் துறைகள் மாற்றியமைக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியது.

 

தற்போது வெளியான தகவலின்படி டி.ஆர்.பி.ராஜாவுக்கு தங்கம் தென்னரசு வகித்து வந்த தொழில்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மனோ தங்கராஜ் வகித்து வந்த தொழில்நுட்பத்துறை நிதித்துறை அமைச்சராக இருக்கும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் கவனித்து வந்த நிதித்துறை மற்றும் மனித வளத்துறை தங்கம் தென்னரசுவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட நாசர் வகித்து வந்த பால்வளத்துறை மனோ தங்கராஜுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு தமிழ் வளர்ச்சித்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

 

இந்தநிலையில் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராகப் பதவியேற்ற பின் ஆளுநருடன் அமைச்சர்கள் எடுத்துக்கொண்ட குழு புகைப்படத்தில் அமைச்சர் பி.டி.ஆர் மட்டும் மாஸ்க் (முகக்கவசம்) அணிந்திருந்தார். இது சிலரின் கவனத்தை ஈர்த்தது. இது எதிர்ப்பின் அல்லது அதிருப்தியின் வெளிப்பாடாக இருக்கலாம் என கருதப்பட்ட நிலையில் 'தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் தமிழ்நாட்டை மீண்டும் முன்னணி மாநிலமாக நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபடுவேன். புதிதாக நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தங்கம் தென்னரசுவிற்கு வாழ்த்து. நம்பர் ஒன் துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்பத் துறையை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி' என பி.டி.ஆர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

அதிகரிக்கும் கொரோனா; கேரளாவில் முகக் கவசம் கட்டாயம்!

Published on 09/04/2023 | Edited on 09/04/2023

 

Face mask mandatory for pregnant women and elderly in Kerala

 

உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று கடந்த ஒரு ஆண்டாகக் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக இருந்து உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்பட்டன. இரண்டாம் அலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனையில் படுக்கையின்மை உள்ளிட்ட சவால்களை அரசுகள் எதிர்கொண்டு வந்தன.  

 

இதனிடையே தடுப்பூசி, முகக் கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலம் தொற்று பரவலைக் கட்டுக்குள் இந்திய அரசு வைத்திருந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

 

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் புதுச்சேரி மாநிலத்தில் பொது இடங்களில் முகக்கசவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் பிற நோய்கள் உள்ளவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களாகத் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.