Is the public place hygienic? Mayor inspect

Advertisment

திருச்சி உறையூர் காசி விலங்கி மீன் மார்கெட்டில் மாநகராட்சி சார்பில் இன்று திடீர் ஆய்வு நடைபெற்றது. மேயர் அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது கழிவுகளால் அப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் முழுமையாக அடைக்கப்பட்டு, கழிவுநீர்கள் தேங்கி நிற்பதை கண்ட மேயரும், கமிஷனரும் உடனடியாக அதனை சரிசெய்ய உத்தரவிட்டனர்.

மீன் மார்க்கெட் தினமும் சுத்தம் செய்யப்படுகிறதா என்று வியாபாரிகளிடம் கேட்டறிந்தனர். குறிப்பிட்டுள்ள மாநகராட்சி எல்லைக்குள் தான் மீன் கடைகள் வியாபாரம் நடந்திட வேண்டும். வெளி பகுதியில் கடைகள் போடக்கூடாது என்று வியாபாரிகளை எச்சரித்தனர். இந்த ஆய்வின் போது மாநகராட்சி நகர பொறியாளர் அமுதவல்லி, செயற்பொறியாளர்கள், கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.