
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 40வது வார்டு பகுதிக்குட்பட்ட எடமலைப்பட்டிபுதூர், எம்ஜிஆர் நகர், ராஜீவ்காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களிடம்வீட்டு வரி மற்றும் தண்ணீர் வரியை உடனடியாகக் கட்டவேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும் தண்ணீர் வரி கட்டாதவர்கள் இல்லத்தில் இணைப்பைத் துண்டிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் எனக் கூறப்படுகிறது.
தற்போது கரோனா காலம் என்பதால், பொதுமக்கள் அன்றாட வாழ்க்கையில் வருமானம் குறைவாக இருப்பதாக எவ்வளவு முறை எடுத்துக் கூறினாலும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. அதனால், இன்றுஉயர் அதிகாரிகளை சந்திப்பதற்காக கிராப்பட்டி பகுதியில், அமைந்துள்ள இளநிலை பொறியாளர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க முன்னாள் மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வம் தலைமையில் சென்றனர்.அப்போது அதிகாரிகள் இல்லாததால்முற்றுகையிட்டுப் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Follow Us