தமிழகத்தில் 35- வது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் நவம்பர் 28 ந்தேதி தொடங்கியது. மாவட்ட ஆட்சியராக சிவனருள், அரசு ஆணையின்படி பொறுப்பேற்று கொண்டார்.

Advertisment

வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மக்கள் குறை தீர்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறும். அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தின் முதல் கூட்டம் வரும் டிசம்பர் 2-ம் தேதி காலை 10.00 மணிக்கு தற்காலிக மாவட்ட ஆட்சியர் அலுவலகமாகவுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும்.

Advertisment

public grievance tirupattur collector announced

எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது குறைகளை இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு மனுவாக வழங்கலாம். இக்கூட்டத்தில் அனைத்து துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு மக்கள் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்துள்ளார்.