தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலையின் பரவல் அதிகமாக இருப்பதால் 10.05.2021 முதல் 24.05.2021 வரை சில கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படையக் கூடாது என்ற நோக்கத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அவ்வாறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் அவசிய தேவைகள் தவிர்த்து வெளியே வரக்கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டது.
மக்களின் அசாதாரண போக்கைத் தடுக்கும் நோக்கத்தில் ஆங்காங்கே கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு கடுமையான சூழலிலும் கரோனாவின் பாதிப்பை முழுவதும் உணராமல், பொது ஊரடங்கு காலத்திலும் பொதுமக்கள் இயல்பாக செயல்படுகின்றனர். மேலும், சில இடங்களில் வாகனங்களில் கூட்டமாக சுற்றித்திரிகின்றனர்.அதேபோல், சென்னை அரும்பாக்கம் அண்ணா ஆர்ச் சிக்னல் அருகே மக்கள் கூட்டமாக வாகனங்களில் செல்வதை நம்மால் படத்தில் காணமுடிகிறது.
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-05/lockdown-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-05/lockdown-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-05/lockdown-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-05/lockdown-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-05/lockdown-5.jpg)