Skip to main content

வடியாத வெள்ள நீர்... கடும் சிரமத்தில் பொதுமக்கள்! (படங்கள்)

 

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக வடகிழக்கு பருவமழை பெய்துவருகிறது. இந்தப் பருவமழையால் சென்னையில் உள்ள பல்வேறு முக்கியமான இடங்களிலும் தண்ணீர் அதிகமாக தேங்கியுள்ளது. தேங்கிய தண்ணீரை ஆங்காங்கே மோட்டார் மூலம் வெளியேற்றியும் வருகின்றனர். இருந்தபோதிலும் சில தாழ்வான பகுதிகளில் தொடர் மழை காரணமாக தண்ணீர் அளவுக்கு அதிகமாக தேங்கியுள்ளது.

 

இதனால் அப்பகுதி குடிசைவாழ் மக்கள் மட்டுமின்றி பெரும்பாலானோர் கடும் சிரமத்தை சந்தித்துவருகின்றனர். அதேபோல் கொரட்டூரை அடுத்து கொளத்தூர் தொகுதி புத்தகரம் பகுதியில் அனைத்து தெருக்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் தங்களுடைய இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதாக அப்பகுதி மக்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !