
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் 4,800 லிட்டர் கள்ளச்சாராயம் ஊறல் போலீசாரால் அழிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக பொதுமக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது மலைப் பகுதியில் நிகழ்ந்தபட்ட சோதனையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராய ஊறல்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் சுமார் 4,800 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் போட்டிருந்த கலன்களை கீழே கொட்டி அழித்தனர். கள்ளச்சாராய ஊறல் போட்ட நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.