கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் தக்காளி விலை அதிரடியாக உயர்ந்தது. மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

Advertisment

இதனையடுத்து தமிழ்நாடு அரசு, பண்ணை பசுமை காய்கறிகள் மூலமாக நேற்றுமுதல் (24.11.2021) தக்காளி ஒரு கிலோ ரூ.79க்கு விற்பனையை துவங்கியிருந்தது. இந்த நிலையில், இன்று சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தைக்கு வரத்து அதிகரித்ததன் காரணமாக தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு 40 ரூபாய் வரை குறைந்துள்ளது.

Advertisment

தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், தேனாம்பேட்டையில் உள்ள பண்ணைப் பசுமை கடையில் தக்காளி ரூபாய் 75க்கு விற்கப்படுவதால் அங்கு மக்கள் நீண்ட வரிசையில் நின்று தக்காளி வாங்கிச் சென்றனர்.