Advertisment

திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையை சுமார் ஒரு மணி நேரம் ஸ்தம்பிக்க வைத்த பொதுமக்கள்..! 

The public blocked the Trichy-Karur National Highway for about an hour ..!

திருச்சியிலிருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிருஷ்ணராயபுரம் என்ற இடத்தில், இன்று (12.04.2021) திடீரென பொதுமக்கள் திரண்டு சுமார் ஒருமணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட அவர்கள், “வெளி ஊர்களுக்குச் செல்லக்கூடிய விரைவு பேருந்துகள், மாநகருக்குள் செல்லக்கூடிய பேருந்துகள், திருச்சியிலிருந்து கரூர் நோக்கி செல்லும் பேருந்துகள் என எந்தப் பேருந்துகளும் குறிப்பிட்ட இந்த கிருஷ்ணராயபுரம் நிறுத்தத்தில் மட்டும் நிற்பதில்லை.

Advertisment

இந்த நிறுத்தத்தில் இறங்கக் கூடிய பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தும் எந்தப் பேருந்துமே இங்கு நிற்பதில்லை” என்று தெரிவித்தனர். மேலும் அவர்கள், “ஏன் இந்தப் பேருந்து நிறுத்தத்தில் மட்டும் பேருந்துகள் நிற்பதில்லை?” என்று அரசு போக்குவரத்துத் துறைக்கு கேள்வியும் எழுப்பியுள்ளனர்.

Advertisment

கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிறுத்தப்படவில்லை எனில், நாங்கள் அடுத்தக்கட்ட போராட்டத்தை நடத்துவோம் என்றும், உடனடியாக அதிகாரிகள் இப்பிரச்சனையில் தலையிட்டு இந்தப் பேருந்து நிறுத்தத்திலும் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

karur trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe