/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/64_101.jpg)
கடலூர் மாவட்டம் வடலூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடலூர் நகராட்சியில் உள்ள 20,26, 27 ஆகிய வார்டுகளில் கடந்த ஒரு வாரம் காலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதியில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. அந்த வார்டு பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்து வந்தனர். இது குறித்துக் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நகர்மன்ற தலைவர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் இது குறித்து முறையிட்டனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/65_118.jpg)
இந்த நிலையில் திங்கள் கிழமை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் காலிக்குடங்களுடன் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்த தகவல் அறிந்த நகர்மன்ற தலைவர் சிவக்குமார் மற்றும் வடலூர் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி தற்சமயம் குடிதண்ணீர் டேங்கர் லாரியில் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஓரிரு தினங்களில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் மின்மோட்டார் சரி செய்யப்பட்டு விரைவில் தங்கு தடை இன்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதனையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)