Advertisment

அதிகாரிகளால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள்

சீர்காழியில் வெள்ளத்தால்பாதித்தபகுதியைப் பார்வையிட வராத அதிகாரிகளைக் கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

Advertisment

மயிலாடுதுறை மாவட்டம்சீர்காழியில் பெய்த கனமழைகாரணமாகப்பாதிக்கப்பட்ட பகுதிகளை மயிலாடுதுறை மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் அமுதவல்லி மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா பார்வையிட்டு வருகின்றனர்.தென்னாம்பட்டினம்,எடமணல்,வழுதலை குடி,திருமுல்லைவாசல்உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அந்த அதிகாரிகள் ஆய்வு செய்ய வருவதாகக் கூறியிருந்த நிலையில் காலை 9 மணியிலிருந்து விவசாயிகளும், பொதுமக்களும் காத்திருந்தனர். ஆனால் அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்திருமுல்லைவாசல்- சீர்காழி சாலையில் அமர்ந்து வெள்ளத்தில்மூழ்கிப்பாதிப்படைந்த பயிர்களைக் கையில் வைத்துக்கொண்டு மறியலில் ஈடுபட்டனர். "பாதித்தபகுதிகளைப்பாரபட்சம் இல்லாமல்பார்வையிட்டுக்கணக்கெடுப்பு செய்து முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும்" என்கிறார்கள் விவசாயிகள்.

Advertisment

Farmers Mayiladuthurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe