இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. தென் மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களை விட சற்று அதிகமாக இருந்து வருகின்றது.
இதற்கிடையே தமிழகத்தில் பொதுமுடக்கம் வரும் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நிலையான வழிகாட்டுதல்களின் கீழ் சுற்றுலா தளங்களைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி இன்று முதல் சென்னை மெரினா கடற்கரை மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்துவிடப்பட்டுள்ளது. ஆனால் 10 வயதுக்குக் கீழே உள்ளவர்களும், 60 வயதுக்கு அதிகமானவர்களும் மெரினா செல்ல தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.