தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில், புதிய தளர்வுகளை அளிப்பது குறித்தும், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ குழுவினருடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.
அதன்படி இன்று தமிழகத்தில் பொதுமுடக்கம் வரும் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி கடந்த எட்டு மாதங்களாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த சென்னை மெரினா கடற்கரை வரும் 14ம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தவிட்டுள்ளது. மெரினாவை மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது திறப்பீர்கள் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.