Advertisment

மழைநீருடன் கலந்து செல்லும் கழிவுநீர்; பொதுமக்கள் கடும் பாதிப்பு!

 public affected Rainwater overflowing the roads in vellore

Advertisment

நேற்று முன் தினம் (11-08-24) பெய்த கனமழையின் காரணமாக வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காட்பாடி முத்தமிழ்நகர், எம்ஜிஆர் நகர், வி.ஜி.ராவ் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் சூழ்ந்தது. இதனால், அப்பகுதியில் இருப்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். அந்த பகுதிக்கு, நேற்று மாலை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, மாநகராட்சி ஆணையர் ஜானகி, வருவாய் கோட்டாட்சியர் கவிதா, ஒன்றாவது மண்டல குழுத் தலைவர் புஷ்பலதா வன்னியராஜா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆனால், நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக அதே பகுதியான, முத்தமிழ் நகர், வி.ஜி.ராவ் நகர், ஆகிய பகுதிகளில் மீண்டும் மழைநீர் கலந்து கழிவுநீர் சாலைகளை சூழ்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், சித்தூர் பேருந்து நிலையம் மற்றும் திருவலம் சாலை பழைய காட்பாடி முத்தமிழ் நகரில் மீண்டும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அவ்வழியாக செல்லக்கூடிய பொதுமக்கள் பள்ளி கல்லூரில் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார். இதுபோன்ற மழைநீர் சூழ்வதற்கு மிக முக்கியமாக பார்க்கப்படுவது சரியான கால்வாய் வசதி இல்லாததே என்பது குறிப்பிடத்தக்கது.

rain Sewage Vellore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe