Advertisment

மலைப்பாதையில் ஆட்டோ விபத்து – சீரான நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை...

திருப்பத்தூர் மாவட்டம், புதூர்நாடு பகுதிக்கு உட்பட்ட தகரகுப்பம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் தனது ஷேர் ஆட்டோவில் நவம்பர் 19ந்தேதி மாலை 4.30 மணியளவில் பள்ளியில் இருந்து மாணவ – மாணவிகளை ஏற்றிக்கொண்டு தகரக்குப்பம் பகுதிக்கு சென்றுக்கொண்டுயிருந்தபோது, மலைப்பாதையில் ஆட்டோ கவிழ்ந்து 5 பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் 3 பள்ளி மாணவர்கள் கவலைக்கிடமாக உள்ளனர்.

Advertisment

public about thirupattur accident

இதுப்பற்றி திருப்பத்தூர் கிராமிய காவல்நிலைய காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், ஓட்டுநர் உரிமம் இல்லாத நபர் சரியான பயிற்சி இன்றி ஆட்டோ ஓட்டியதே காரணம் என தெரியவந்துள்ளது.

புதூர்நாட்டில் இருந்து நெல்லிவாசல்நாடு, ஆலங்காயம் உட்பட மலைக்கிராமங்களுக்கு செல்வதற்கு இந்த பகுதியில் ஆட்டோக்களையே மக்கள் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். மலையில் ஓடும் ஆட்டோக்கள் பெரும்பாலும் உரிமம் பெறாமல் ஓட்டப்படும் ஆட்டோக்கள் என்றும், அதிலும் பல ஓட்டுநர்கள் முறையாக ஓட்டுநர் பயிற்சி பெற்று, லைசென்ஸ் பெற்றவர்கள் இல்லை எனவும் கூறப்படுகிறது.

Advertisment

சாதாரண சாலையில் வாகனம் ஓட்டுவதற்கும், மலைப்பாதையில் வாகனம் ஓட்டுவதற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. ஓட்டுநர் பயிற்சியே பெறாத இவர்கள் தாறுமாறாக வாகனம் ஓட்டுவதால் தான் விபத்துக்கள் நடைபெறுகின்றன என்கிறார்கள் அப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள்.

இதுப்பற்றிய புகார் அதிகாரிகளுக்கு சென்றதும், நவம்பர் 20ந்தேதி திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள், அதிகமாக குழந்தைகளை ஏற்றி வந்த 10 ஷேர் ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர், அவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்துள்ளது வட்டார போக்குவரத்து அலுவலகம்.

ஏதாவது சம்பவம் நடந்து நடவடிக்கை எடுப்பதற்கு பதில், அடிக்கடி இப்படி ரெய்டு செய்தால் அளவுக்கு அதிகமாக பொதுமக்களை, பள்ளி குழந்தைகளை அழைத்து செல்வதை ஆட்டோ ஓட்டுநர்கள் கைவிடுவார்கள். செய்வார்களா அதிகாரிகள் ?.

accident
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe