Advertisment

பப்ஜி விளையாட்டில் மூழ்கிய கல்லூரி இளைஞர் திடீர் தற்கொலை... போலீசார் விசாரணை!

pubg Police investigation!

Advertisment

சென்னை தாம்பரம் அருகே கல்லூரி இளைஞர் ஒருவர் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த நிலையில், திடீரென அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் கடந்த ஒரு வாரமாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டே 'பப்ஜி' எனும் மொபைல் கேமை விளையாடி கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று அருண்குமார் வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றுவிட்ட நிலையில் அருண்குமார் பப்ஜி விளையாடிகொண்டிருந்துள்ளார். அவரது குடும்பத்தார் வீடு திரும்புகையில் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டுஇருந்தது. இதனால் சந்தேகமடைந்த இளைஞனின் அண்ணன் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த பொழுது அருண்குமார் தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார். இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு அவர் பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chennai pubg police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe