ptr

திமுக மதுரை மத்திய தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசின் அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில் கடந்த ஆண்டு ஜூலை 22 ஆம் தேதியன்று திடீரென அமைச்சர்களின் முகவரி உள்ளிட்ட விபரங்கள் நீக்கப்பட்டுள்ளன. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மக்களுக்கு அரசின் செயல்பாடுகள் குறித்து தகவல்களை அதிகாரப்பூர்வமாக அரசு இணைய தளம் வழங்குகிறது. ஆனால், எந்த காரணமும் தெரிவிக்காமல் அதில் இடம்பெற்றிருந்த அமைச்சர்களின் தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் உள்ளிட்ட விபரங்கள் நீக்கப்பட்டது சட்ட விரோதமானது என அறிவிக்க வேண்டும். ஆகையால், இணையதளத்தில் நீக்கம் செய்யப்பட்ட விவரங்களை மீண்டும் பதிவேற்றம் செய்ய அரசுக்கு உத்தரவிட கோரியிருந்தார்.

Advertisment

இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது " அமைச்சர்களின் முழுவிபரங்களை அரசு இணையத்தில் பதிவேற்றம் செய்யபட்டுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.