/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/445_2.jpg)
கோடையில் தெரு நாய்கள், விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு தேவையான தண்ணீரை ஒரு கிண்ணத்தில் வைப்பது குறித்து பொதுமக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக Save Shakti Foundation, Royal Canin உடன் இணைந்து 'Keep a Bowl' என்ற சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், அரசு முதன்மை செயலர்டாகடர்.ஜே. ராதா கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், ஸ்ரீமதி நீனா ரெட்டி, Chairperson Savera Group of Hotels, ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பேசிய நிதி அமைச்சர், "உண்மையில், நான் மதுரையில் இருக்க வேண்டியிருந்தது, ஆனால் இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சிக்காக சென்னைக்கு வந்தேன். தற்போதைய சூழ்நிலையில் இந்த முயற்சி மிகவும் முக்கியமானது. இந்த நடவடிக்கையை எடுத்ததற்காக அனைவரையும் நான் வாழ்த்துகிறேன், மேலும் இந்த முயற்சிக்கு ஆதரவாக இருக்கும் மற்றவர்களையும் நான் வாழ்த்துகிறேன். நமது தமிழ் கலாச்சாரம் பழங்காலத்திலிருந்தே இருந்து வருகிறது, அது கருணையினால் மட்டுமே முன்னேறியுள்ளது. தமிழ்நாடு பல்வேறு துறைகளில் அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளது. எல்லாவற்றையும் தானாகச் செய்வது சாத்தியமில்லை என்பதை அரசாங்கமே உணர்ந்து, இந்தியாவிலேயே முதல்முறையாக தெருநாய்கள் மற்றும் பிற உயிரினங்களின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் நடந்து செல்ல உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், தெருநாய்கள் அமைதியாக நடப்பதைக் காணலாம். குரல் இல்லாத உயிரினங்களுக்கு உதவ இந்த மேடையைப் பயன்படுத்தும் நபர்களின் முயற்சி பாராட்டத்தக்கது. இந்த ‘Keep a Bowl’ முயற்சியானது எந்த ஒரு கடும் வலிமை மிக்க உழைப்பையோ, பெரிய முதலீடையோ கோரவில்லை. ஒரு சிறிய பாத்திரம் அல்லது தண்ணீர் கிண்ணம் வைப்பது உயிரினங்களுக்கு பெரிய மாற்றத்தையே ஏற்படுத்தும். நமது கலாசாரத்தில் பசித்தவர்களுக்கு உணவு கொடுப்பதற்கு அதிக மதிப்பு கொடுக்கிறோம். உண்மையில், மற்ற மனிதர்களின் பசியை போக்குவது மிகப் பெரிய செயல், அதேபோல், இந்த விலங்குகளையும் நாம் கவனித்துக் கொள்ள வேண்டும். நிறுவனர்கள் மற்றும் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)