ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ளது பட்டறை வேலம்பாளையம் என்ற கிராமம். இன்று காலை 15 வயது கொண்ட மாணவி தன் வீட்டுக்கு முன்பு உள்ள போர்வெல் குழாயில் தண்ணீர் பிடித்து துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 30 வயதுள்ளகுமார் என்பவன் கையில் அரிவாளுடன் வந்து அந்த மாணவியை திடீரென தாக்கதொடங்கினான்.

Advertisment

Psycho attack on student... erode police investigation

ஐயோ, அம்மா, காப்பாத்துங்க.. என அலறினாள் மாணவி, ஆனாலும் விடாமல் துரத்தி துரத்தி தாக்கினான் அவன். மாணவிக்கு முகம், கழுத்து, கை போன்ற பகுதிகளில் வெட்டு விழுந்தது. ரத்தம் கொட்டியது மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கொலைவெறிச்செயலில் ஈடுபட்ட அந்த நபரை வளைத்து பிடித்தனர். பின்னர் மாணவியை அங்கிருந்து மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அந்த மாணவி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அபாய கட்டத்தில் அந்த மாணவி சிகிச்சை பெற்று வருகிறார்.

மாணவியை தாக்கியஅந்த இளைஞன் பெயர் குமார் என்பதும், அவன் ஒரு சைக்கோவாக அப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளான். இதற்கு முன்பு இரண்டு வீடுகளுக்கு தீ வைத்திருக்கிறான் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஏதும் அறியாத மாணவியை ஒரு சைக்கோவின் வெறிச்செயல் அநியாயமாக உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளி நபர்கள் தெருவில் நடமாடும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது இச்சம்பவம் உணர்த்துகிறது.

Advertisment