எட்டு வழிச் சாலைக்கு விவசாயிகளின் ஒப்புதலை பெற்ற பிறகு தான் நிலத்தில் அதிகாரிகள் காலடி வைக்க வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர்பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.
சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
சென்னை - சேலம் எட்டு வழி சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நியாயப்படுத்த தவறான தகவலை பரப்புகிறார். உதாரணத்திற்கு காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரு ஏக்கர் நிலம் ரூபாய் 8.00 கோடி சந்தை மதிப்புள்ள நிலையில் அதிகபட்சம் ரூபாய் 8.00 லட்சம் விலை நிர்ணயம் செய்வது நியாயமா?
எனவே விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதை கைவிட்டு விவசாயிகளின் ஒப்புதலை பெற்ற பிறகு தான் நிலத்தில் அதிகாரிகள் காலடி வைக்க வேண்டும் என்றார்.