/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1000_57.jpg)
“இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முயற்சி எடுப்போம்” இலங்கை கிழக்கு மாகாண ஆளுநரும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல மாநில கௌரவர் தலைவருமான செந்தில் தொண்ட்மான் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிழக்கு மாகாண ஆளுநராக தற்போது பொறுப்பேற்றுள்ள இந்திய வம்சா வழியைச் சேர்ந்த செந்தில் தொண்டமான் நேற்று திருச்சிக்கு வருகை தந்தார். இவர் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்சுத்தின் மாநில கௌரவ தலைவராக உள்ளதால், அச்சங்கத்தின் திருச்சி மாவட்டம் சார்பில் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அச்சங்கத்தின் தலைவர் ஒண்டிராஜ், மாநில செயலாளர் சூரியூர் ராஜா உள்ளிட்ட மாநில, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ஜல்லிக்கட்டு நம்முடைய பாரம்பரியம், கலாச்சாரம் இரண்டையும் நம்மிடம் இருந்து பிரிக்க முடியாத ஒரு வரலாற்றுடன் தொடர்புடைய வீர விளையாட்டு, அந்த ஐல்லிக்கட்டு நடப்பதற்கு எந்தவித தடையும் இல்லை என்பது மகிழ்ச்சியான செய்தி. எனவே இந்த சங்கம் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான பலகட்ட முயற்சிகளை எடுத்து அதில் வெற்றிப் பெற்றுள்ளது. எனவே நானும் இந்த சங்கத்துடன் இணைந்து செயல்படுவதில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக மீனவர்கள் யாரும் வேண்டுமென்றே எல்லையை தாண்டி வருதில்லை.
பெரும்பாலும் கடல் சீற்றங்கள், உள்ளிட்ட சில காரணங்களால், அவர்கள் தவறுதலாக எல்லையைத்தாண்டி வந்து விடுகிறார்கள். அப்படி சிறை பிடிக்கப்பட்டவர்களைக் கடந்த 25 ஆண்டுகளாக இலங்கை அரசாங்கத்திடம் பேசி அவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். இனியும் நாங்கள் அதைத்தொடர்ந்து செய்வோம். மீனவர்களை பாதுகாப்பது எங்கள் கடமை” என்றார். அதேபோல் இலங்கையில் ஐல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே விரைவில் அங்கு ஐல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான அனைத்து விதமான முயற்சிகளும் எடுக்கப்படும்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)