Advertisment

காலாவிற்கு எதிர்ப்புகள் மிக கம்மியாக இருக்கிறது; இன்னும் அதிகமாக எதிர்ப்பார்த்தேன்: ரஜினி

காலாவிற்கு எதிர்ப்புகள் ரொம்ப கம்மியாக இருக்கிறது; நான் இன்னும் அதிகமாக எதிர்ப்பார்த்தேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

கர்நாடகாவில் காலா வெளயீட்டிற்கு ஒரு பிரச்சனையும் வராது என்று நினைக்கிறேன். ஏனெனில் எந்த ஒரு காரணமும் இல்லாமல் கர்நாடகாவில் காலாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தடை விதித்து வருகின்றனர்.

Advertisment

கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கும் தெரியும் எது நியாயம் என்று. எதுவும் நடந்தால் பலத்த பாதுகாப்பு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கும் மேல் நான் மிகுந்த மரியாதை கொண்ட தேவகவுடா நிச்சயம் படத்தை தடை செய்ய அனுமதிக்க மாட்டார்.

அரசியல் பிரவேசத்திற்கு பின் காலா வெளியாவதால் எதிர்ப்புகள் அதிகமாக இருக்கும் என எதிர்ப்பார்த்தேன். ஆனால் எதிர்ப்புகள் ரொம்ப கம்மியாக இருக்கிறது, நான் இன்னும் அதிகமாக எதிர்ப்பார்த்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

rajini
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe