Advertisment

அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள், மருந்துகள் இல்லாததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

sendurai

அரியலூர் மாவட்டம்,செந்துறை ஒன்றியத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லாத, மருந்துகள் இல்லாத நிலையை உருவாக்கிய தமிழக அரசை கண்டித்து செந்துறையில் அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

திமுக மாவட்ட செயலாளர் எஸ். எஸ். சிவசங்கர் தலைமை தாங்கினார். செந்துறையில் உள்ள 24 மணி நேர வட்டார தலைமை மருத்துவமனையில் ஆறு மருத்துவர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் ஒருவர் மட்டுமே உள்ளார். மேலும் மருத்துவப் பணியாளர்களும், மருந்துகளும் குறைவாக உள்ளன.

Advertisment

குமிழியம்24 மணிநேர மருத்துவ மனையிலும், இரும்புலிகுறிச்சி, பொன்பரப்பி, குழுமூர், மணக்குடையான், அங்கனூர் ஆகிய ஊர்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதுமான மருத்துவர்களும் இல்லை மருந்துகளும் இல்லை என ஆர்ப்பாட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மருத்துவர்களையும் மருத்துவப் பணியாளர்களையும் நியமிக்க வேண்டும் மேலும் போதுமான மருந்துகளை இருப்பில் வைக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

government Tamil Nadu against protest
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe