/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/shop32323.jpg)
கடலூர் மாவட்டம், சிதம்பரம் மேலவீதி காய்கறிமார்க்கெட்டைஉழவர் சந்தைக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து காய்கறி வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் இன்று (17/06/2022) கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
சிதம்பரம் மேலவீதியில் காய்கறிமார்க்கெட்இயங்கி வருகிறது. இங்கே 150-க்கும்மேற்பட்ட காய்கறி, தேங்காய், பழக்கடை உள்ளிட்ட பல்வேறு விதமான கடைகள் இயங்கி வருகின்றன. இதில் 100 கடைகள் தனியார் இடத்திலும், 50 கடைகள் சிதம்பரம்நகராட்சிக்குசொந்தமான இடத்தில் உள்ளது,
இந்த நிலையில், நகரத்தின் மையப் பகுதியில் இயங்கி வந்த காய்கறிமார்க்கெட்டைசிதம்பரம் வடக்குமெயின் ரோடுபகுதியில் உள்ள உழவர் சந்தையில் இந்த மார்க்கெட்டைஅமைக்ககடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதற்குசிதம்பரம் மேலவீதி காய்கறி வியாபாரிகள்நலசங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் காய்கறிமார்க்கெட்டைஇடமாற்றம் செய்யக்கூடாது என்றும் இதே இடத்தில் புதியகடைகளைகட்டித்தர வேண்டும்எனக்கோரிக்கை விடுத்து இன்று (17/06/2022) காய்கறிமார்க்கெட்டைஅடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் காலை முதல் காய்கறி வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து சங்கத்தின் செயலாளர் ரவீந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சிதம்பரம் மேலவீதி அனைத்து கடைகளும் உள்ள பகுதி இந்த இடத்திலிருந்து காய்கறிமார்க்கெட்டைமட்டும்,தனியாகபிரித்தால் பொதுமக்கள் சிரமம் அடைவார்கள். எனவே, இதே இடத்தில் காய்கறிமார்க்கெட்டைகட்டித்தர வேண்டும் அரசு சரியான முடிவு எடுக்க வில்லை என்றால் அடுத்த கட்டத்தை நோக்கி போராட்டம் செல்லும்" எனக் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)