Pondicherry

Advertisment

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியர் நிர்மலா மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மீது சிபிஐ வழக்குப் பதிய வலியுறுத்தியும், ஆளுநரை திரும்ப பெற கோரியும் புதுச்சேரியில் போராட்டம் நடைபெற்றது.

Pondicherry

புதுச்சேரி திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ் இன உணர்வாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழ்நாடு ஆளுநர் பன்வரிலால் புரோகித், நிர்மலாதேவி ஆகியோர் படங்களை கையிலேந்தி செருப்பால் அடித்தபடி ஊர்வலமாக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட வந்தவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பன்வரிலால் மற்றும் நிர்மலாதேவி படங்களை தீயிட்டு கொளுத்தி மத்திய பா.ஜ.க. அரசுக்கும், தமிழக ஆளுநருக்கும் எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.