Advertisment

சீமான் உருவபொம்மை எரிப்பு...காங்கிரஸாரை கைது செய்த போலீஸ்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையின் போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில்பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Advertisment

protesters arrested

"இந்த பேச்சு கண்டிக்கதக்கது, இந்திய ஜனநாயகத்துக்கு விரோதமானது, தேசபாதுகாப்பு சட்டத்தில் சீமானை கைது செய்ய வேண்டும்" என தமிழக காங்கிரஸ் கமிட்டி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் சீமான் மீது பல்வேறு மாவட்டங்களில் காவல்துறையினரிடம் காங்கிரஸார் புகார் மனு தந்துவருகின்றனர்.

சீமானின் சர்ச்சை பேச்சை கண்டிக்கும் விதமாக ராணிப்பேட்டை அடுத்த முத்துக்கடை பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் சீமானின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சீமானின் உருவபொம்மையை எரித்து முடித்து, சீமானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அதன்பின்னர் போராட்டம் செய்தவர்களை இராணிப்பேட்டை நகர காவல்நிலைய போலீசார், கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

rajiv gandhi congress naam thamizhar seeman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe