திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பாளையங்கோட்டை திமுக எம்எல்ஏ போராட்டத்தில் பங்குகொள்ளாமல் இளநீர் கடையில் அமர்ந்து இளைப்பாறிக்கொண்டிருந்ததுசர்ச்சையை ஏற்படுத்தியதோடு அது தொடர்பான படங்கள் பரவி திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க தலைவர் உத்தரவின் படி இன்று பாளையங்கோட்டையில் குடம் இங்கே! தண்ணீா் எங்கே!! கோஷங்களுடன் போராட்டம் நடைபெற்றது.
ஆளும் அதிமுக அரசை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் மு.அப்துல் வஹாப் தலைமையில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சியை சேர்ந்தவர்கள்பங்கேற்றனர். ஆனால் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் T.P.M.மைதீன்கானோ இளநீர் கடையில் இளைப்பாறிக் கொண்டிருந்தார். அவர் இப்படி செய்ததை திமுகவினரே சமூக வலைதளத்தில் பரப்பி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.