நகர்புற சாலைகளில் கால்நடைகள்...நடவடிக்கை வேண்டும் என தவ்ஹித் போராட்டம்!!

திருவாரூர் மாவட்ட அரசு அதிகாரிகளின் அலட்சியத்தை கண்டித்து தவ்ஹித் ஜமாத்தினர் பழைய பேருந்து நிலையம் அருகில் பிரமாண்டமான ஆர்ப்பாட்டம் செய்து எதிர்ப்பை பதிவுசெய்துள்ளனர்.

protest in thiruvarur

திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட நெடுஞ்சாலைகள், கூத்தாநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட நெடுஞ்சாலைகள் திருத்துறைப்பூண்டி நகராட்சி, மன்னார்குடி நகராட்சி, குடவாசல் பேரூராட்சி, நன்னிலம் பேரூராட்சி, முத்துப்பேட்டை பேரூராட்சி, போன்ற அனைத்து நகரங்களிலும் உள்ள பிரதான சாலைகளில் கால்நடைகள் நின்றுகொண்டு போக்குவரத்துக்கும், நடந்து செல்லும் குழந்தைகள், பெண்கள் போன்ற பாதசாரிகளுக்கும் இடையூறுகளை தரும் வகையில் நிற்பது தொடர்கதையாகி உள்ளது.

இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குறிப்பாக வாகன ஓட்டிகள் வாகனத்தில் செல்லும் பொழுது கால்நடைகள் குறுக்கே நிற்பதால் அடிக்கடி விபத்துக்குள்ளாகி உயிரிழப்புகளும், ஊனமாகும் நிலையும் உருவாகிக்கொண்டே வருகிறது.

ஆகையால் நகராட்சி, உள்ளாட்சி போன்ற கட்டமைப்புகள் கொண்ட அரசு அதிகாரிகள் இத்தகைய நிகழ்வுகளை கண்டு கொள்ளாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும், உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு தராத வகையில் கால்நடைகளை நெடுஞ்சாலைக்கு அனுப்பினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய அபராதமும் விதித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தின் வழியாக அரசுக்கு வலியுறுத்தினர்.

protest in thiruvarur

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணை தலைவர் பா. அப்துர் ரஹ்மான் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முன்னிலை வகித்தார், திருவாரூர் நகர தொண்டரணியினர், அனைத்து கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் என சுமார் 400க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்திற்கு கலந்து கொண்டனர்.

protest Tiruvarur
இதையும் படியுங்கள்
Subscribe