கஜாபுயல் பாதிப்பட்ட பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் நிவாரணம் வழங்கவில்லை என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கஜாபுயல் பாதிப்பு ஏற்பட்டு மூன்று மாதங்கள் கடந்தும் திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு இதுவரை தமிழக அரசு அறிவித்த நிவாரணம் வழங்கப்படவில்லை. நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் பயனில்லை. இதனால் ஆத்திரமடைந்த செல்லூர், கீரத்தாங்குடி, திருக்களம்பூர், இறையூர்தாங்கள், கட்டளை,பூங்காவூர், அபிவிருத்திஸ்வரம், நாகலூர் உள்ளிட்ட 14 ஊராட்சிகளை சேர்ந்த 24 கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் செல்லூர் கடைவீதியில் நிவாரணம் வழங்க வேண்டுமென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்த குடவாசல் வட்டாட்சியர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டு நாட்களுக்குள் நிவாரணம் தருவதாக வட்டாட்சியரும் காவல்துறையினரும் உறுதியளித்தப்பிறகு போராட்டத்தை கைவிட்டனர்.