Demonstration to set up an alternative path

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த செம்பளக்குறிச்சி, கவணை, சித்தேரிக்குப்பம் உள்ளிட்ட 15 கிராமங்களுக்கு பிரதான சாலையாக அமைந்து வருவது சென்னை - திருச்சி ரயில்வே சுரங்கப்பாதை.

Advertisment

இந்த சுரங்கப் பாதையில் மழை காலங்களில் எட்டு அடி அளவில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், விவசாயிகள் விவசாய பொருட்களை எடுத்து செல்ல இயலாமலும் அவதிப்படுகின்றனர்.

Advertisment

மேலும் அரசு பேருந்துகள் கிராமங்களுக்கு செல்லாததால் பொதுமக்களின் அன்றாட பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர் கதை ஆகிவரும் நிலையில், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Advertisment

Demonstration to set up an alternative path

அதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் மாற்றுப்பாதை அமைத்து தரக் கோரி விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நெடுந்தூரம் வரை வாகனங்கள் நின்றதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்.