கடந்த சில ஆண்டுகளாக பெரியார் சிலைகள் அவமதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பிரதமர் மோடி தமிழ், திருக்குறள் என்று மேடைகள் தோறும் பேசி வரும் நிலையில் திருவள்ளுவருக்கு பா.ஜ.க வினர் காவி துண்டு அணிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Advertisment

protest in pudukottai

இந்த நிலையில் தான் தஞ்சை பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலையை மர்ம நபர்கள் அவமரியாதை செய்திருந்தனர். அந்த தகவல் பரவியதால் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தது. சிலையை சரி செய்த பிறகு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தாலும் அங்கு வந்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் சிலைக்கு காவி துண்டு, ருத்திராட்ச மாலை, அணிவித்து திருநீரு சூடம் ஏற்றி பூசி தீபாரதணை காட்டினார். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அதன் பிறகு அசர்ஜூன் சம்பத் ஆகியோர் கைது செய்யப்பட்டு சொந்த பிணையில் அனுப்பி வைக்கப்பட்டனர். அதன் பிறகு திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பகுதிக்கு தடுப்புகள் வைத்து தடுக்கப்பட்டு பல கட்ட சோதனைகளுக்கு பிறகு அனுப்பப்படுகின்றனர். சிலையை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் சிதம்பரவிடுதியில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் திருவள்ளுவர் மன்றத்தினர் பல்வேறு பதாகைகளுடன் கருப்பு கொடி ஏந்தி.. திருவள்ளுவரை அவமதித்தவர்களை கைது செய் என்று முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விரைந்து கைது நடவடிக்கை இல்லை என்றால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் கூறினார்கள்.

protest in pudukottai