style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பிப்ரவரி 11 முதல் புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும், கார் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் டி.ஜி.பி சுந்தரி நந்தா அறிவித்திருந்தார். அதேசமயம் "தலைக்கவசம் அணிவது குறித்தும், அதன் அவசியம் மற்றும் பாதுகாப்பு குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், தண்டம் விதிக்கக் கூடாது" என முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், பல அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவின்படி டி.ஜி.பி சுந்தரி நந்தா அறிவுறுத்தலின்படி காவல்துறையினர், போக்குவரத்து காவல்துறையினர் தலைக்கவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டியவர்கள் மீது வழக்கு பதிந்து சம்மன் அனுப்பி நீதிமன்றத்தின் மூலம் அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது பல தரப்பு மக்களிடமும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்நிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன், பாஸ்கர் உள்ளிட்டோர் தலைமையில் அதிமுகவினர் ஹெல்மெட் எனப்படும் தலைக்கவசங்களை சாலையில் போட்டு உடைத்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். கட்டாய தலைக்கவச சட்டத்தை கடுமையாக்க கூடாது என அப்போது அவர்கள் தெரிவித்தனர்.