பெரியார் சிலையை அவமதிக்க தூண்டியதாக எச்.ராஜா உருவபொம்மை எரிப்பு...

periyar

பெரியார் சிலையை அவமதிக்க தூண்டியதாக எச்,ராஜா உருவபொம்மை எரித்து திருவாரூரில் தி,க.வினர்போராட்டம்

திருவாரூர் அருகே பெரியார் சிலை அவமதிப்புக்கு காரணமான பாஜக எச்.ராஜாவின் உருவ பொம்மை எரித்து திகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே தாவரப்பட்டு கிராமத்தில் உள்ள பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு மர்ம நபர்கள் அவமதிப்புசெய்துள்ளனர். இதே போன்று திருச்சியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது.

இந்த சம்பவங்களுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த இரு சம்பவமும் எச்.ராஜாவின் தூண்டுதலின் பேரில் நடை பெற்றதாக திராவிட கழகத்தினர் குற்றம்சாட்டி தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

அந்தவகையில் திருவாரூர் அருகே உள்ள சோழங்கநல்லூர் கடைவீதியில் திகவினர்பெரியாரை அவமதிப்பதற்கு தூண்டுதலாக இருந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் உருவ பொம்மையை எரித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே போல் திருவாரூர் பேருந்து நிலையம் அருகிலும் திகவினர் எச்,ராஜைவைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

periyar statue Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe