ammaa schooty

Advertisment

இந்திய திராவிட விடுதலை கட்சி சார்பாக ஈரோட்டில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும், இந்தியா முழுவதும் சமீபகாலமாக தலித் மக்கள் மீதான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. எஸ்சி., எஸ்.டி சட்டத்தை திருத்தும் முயற்சியிலும் மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது என்றும் ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினார்கள்.