திருச்சியில் கார்த்திக் என்பவர் வங்கியில் கடன் பெற்றுள்ளார். ஆனால் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி கொடுக்காததால், அவரது வீட்டிற்கு மண்டல துணை வட்டாட்சியர் மீது ஜப்தி செய்ய சென்றுள்ளார். அப்போது 20க்கும் மேற்பட்டோர் ஜப்தி செய்ய விடாமல் துணை வட்டாட்சியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் துணை வட்டாட்சியர் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலகர்கள் சங்கத்தினர் இன்று பணிக்கு செல்லாமல் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் வருவாய்த்துறையினர் 750 பேர் பங்கேற்று உள்ளதாக கூறப்படுகிறது.